placeholder image to represent content

P.T.A. Question -6 க.வே.அழகேசன்

Quiz by alagesan k.v

Our brand new solo games combine with your quiz, on the same screen

Correct quiz answers unlock more play!

New Quizalize solo game modes
15 questions
Show answers
  • Q1
    "பாடுஇமிழ் பனிக்கடல் பருகி" என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி −
    கடல் நீர் குளிர்ச்சி அடைதல்
    கடல் நீர் கொந்தளித்தல்
    கடல் நீர் ஒலித்தல்
    கடல் நீர்ஆவியாகி மேகமாதல்
    10s
  • Q2
    வெளிநாட்டில் வேலை செய்துகொண்டிருக்கும் தாயைப் பிரிந்திருக்கும் மகள் .......................................... வருந்திக்கொண்டிருந்தாள். − விடுபட்ட இடத்தில் பொருத்தமான உவமையைப் பயன்படுத்தித் தொடரை நிறைவு செய்க.
    வாழையடி வாழையாக
    கண்ணினைக் காக்கும் இமை போல
    தாமரை இலை நீர்போல
    மழைமுகம் காணாப் பயிர்போல
    10s
  • Q3
    "காலின் ஏழடிப் பின் சென்று" − என்னும் பொருநராற்றுப்படை உணர்த்தும் செய்தி −
    ஏழு நாள்கள் விருந்தளித்துப் பின் விருந்தினரை வழியனுப்புவர்
    விருந்தினரை ஏழு அடி வரை நடந்து சென்று வழியனுப்பினர்
    விருந்தினரின் காலைத்தொட்டு வணங்கினர்.
    எழுவர் விருந்தினரின் பின் சென்று வழியனுப்பினர்
    10s
  • Q4
    ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர்.
    ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்.
    ஒயிலாட்டம் ஒருவரிசையில் நீன்று ஆடப்படுகீறது.
    ஒயிலாட்டத்தில் ஒருவரிசையில் நின்று ஆடப்படுகிறது
    ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றது.
    10s
  • Q5
    அன்பால் கட்டினார், அறிஞருக்குப் பொன்னாடை ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது −
    உவம உருபு
    எழுவாய்
    வேற்றுமை உருபு
    உரிச்சொல்
    10s
  • Q6
    குமரி மாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் −
    தனிநாயகம் அடிகள்
    திரு.பிரகாசம்
    ந.முத்துசாமி
    மார்ஷல் ஏ. நேசமணி
    10s
  • Q7
    காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் .....................................
    என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்
    இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்
    என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது
    இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது
    10s
  • Q8
    முல்லை நிலமக்களின் உணவுப் பொருள்கள்
    வெண்நெல், வரகு
    மீன், செந்நெல்
    வரகு, சாமை
    மலைநெல், திணை
    10s
  • Q9
    வெஃகுவார்க்கில்லை, உரனசைஇ − இச்சொற்களில் உள்ள அளபெடைகள்
    ஒற்றளபெடை, இன்னிசை அளபெடை
    இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை
    சொல்லிசை அளபெடை, ஒற்றளபெடை
    ஒற்றளபெடை, சொல்லிசை அளபெடை
    10s
  • Q10
    "காற்றுள்ளபோதேதூற்றிக்கொள்" − இப்பழமொழி உணர்த்தும் சரியான பொருள்.
    உரிய காலத்தை உணர்ந்து உரிய செயலைத் தேடவேண்டும்.
    உரிய காலத்தில் காற்றைவிட வேகமாகச் செயல்பட வேண்டம்.
    உரிய காலத்தில் ஒரு செயலை முழுமையாக செய்துவிட வேண்டும்.
    காலம் வருமென்று காத்திருந்தால் செயல் கெட்டுவிடும்.
    10s
  • Q11
    உல்கமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக்கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர் −
    அதியன்; பெருஞ்சாத்தான்
    நெடுஞ்செழியன்; திருமுடிக்காரி
    பேகன்; கிள்ளிவளவன்
    உதியன்; சேரலாதன்
    10s
  • Q12
    "விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக் கருவளர் வானத்து இசையில் தோன்றி, உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்; உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்" 12) ஊழ் ஊழ் − இலக்கணக் குறிப்பு
    வினைத்தொகை
    இரட்டைக் கிளவி
    அடுக்குத்தொடர்
    பண்புத்தொகை
    10s
  • Q13
    "விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக் கருவளர் வானத்து இசையில் தோன்றி, உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்; உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்" பாடலின் ஆசிரியர்
    பூதஞ்சேந்தனார்
    குலசேகராழ்வார்
    நப்பூதனார்
    கீரந்தையார்
    10s
  • Q14
    "விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக் கருவளர் வானத்து இசையில் தோன்றி, உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்; உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்" பாடலில் உணர்த்தப்படும் கருத்து
    அறிவியல் செய்தி
    அரசியல் அறம்
    தத்துவக் கருத்து
    நிலையாமை
    10s
  • Q15
    விசும்பு, இசை, ஊழி − பாடலில் இச்சொற்கள் உணர்த்தும் பொருள்கள் முறையே
    காற்று, ஓசை, கடல்
    வானம், காற்று, காலம்
    மேகம், இடி, ஆழம்
    வானம், பேரோலி, யுகம்
    10s

Teachers give this quiz to your class